யூடியூப் தளத்தை தடை செய்தால் என்ன? சாட்டையை சுழற்றிய சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை.! - Seithipunal
Seithipunal


மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் சொல்வதற்காகத் தான் யூடியூப் தளம் இயங்குகிறது என்றால்., அதனை முழுவதுமாக தடை செய்தால் என்ன? என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

வறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் இதற்கு உடந்தையாக உள்ளதா? என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

யூடியூப் வலைத்தளம் மூலமாக வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொண்டேன் என, ஒரு குற்றவாளி வாக்குமூலம் அளித்து இருப்பது குறித்த, வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முவைத்தனர்.

தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்படுவதில் யூட்யூப் நிறுவனமும் உடந்தையாக உள்ளதா?

இப்படிபட்ட யூட்யூப் தளத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? 

அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது... என்று நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முவைத்தனர்..

மேலும், யூடியூப் தளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், யூட்யூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

இது குறித்து விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, சைபர் கிரைம் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI HC DIVISION SAY ABOUT YOUTUBE BAN


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal