சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடக்கம்! - Seithipunal
Seithipunal


தீ விபத்து எதிரொலியாக சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒருநாள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் போட்டி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் 3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி  நேற்று தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் போட்டி நடைபெறும் ஓட்டலின் 9-வது தளத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட சிறிய தீவிபத்து காரணமாக கடைசி நேரத்தில் போட்டி ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தீ விபத்தால் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.இதனால்  3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி  நேற்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி  சகஜ நிலை திரும்பியதும் வீரர்கள் நேற்று மாலை போட்டி நடைபெற இருக்கும் ஓட்டலுக்கு திரும்பி விட்டதாக போட்டி அமைப்பு குழுவினர் தெரிவித்தனர்.

9 சுற்றுகளை கொண்ட சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.  ஓய்வு நாள் எதுவுமின்றி போட்டி வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ரூ.1 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவில் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி உள்பட 10 வீரர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் ஹர்ஷ் வர்தன், பிரனேஷ், இனியன், ஆர்.வைஷாலி, ஹரிகா உள்ளிட்ட 10 வீரர்-வீராங்கனைகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள்.

தொடக்க நாளான இன்று முதல் சுற்று ஆட்டங்களில் மாஸ்டர்ஸ் பிரிவின் முதல் சுற்றில் பிரணவ்-கார்த்திகேயன் முரளி இந்தியா, வின்சென்ட் கீமர் ஜெர்மனி-நிஹால் சரின் இந்தியா, அனிஷ் கிரி நெதர்லாந்து -ராய் ராப்சன் அமெரிக்கா விதித் குஜராத்தி இந்தியா- ஜோர்டென் வான் பாரஸ்ட் நெதர்லாந்து, அர்ஜூன் எரிகைசி இந்தியாஅவோன்டர் லியாங் அமெரிக்கா ஆகியோர் சந்திக்கின்றனர்.

சேலஞ்சர்ஸ் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லியோன் லூக் மென்டோன்கா-ஹர்ஷ் வர்தன், அபிமன்யு புரானிக்-அதிபன், ஆர்.வைஷாலி-இனியன், ஹரிகா-தீப்தயன் கோஷ், பிரனேஷ்- ஆர்யன் சோப்ரா ஆகியோர் மோதுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Grandmasters Chess Tournament starts today


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->