மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியமனம் - காங்கிரஸ் எதிர்ப்பு.!!
congrass opposes bjp ex spokesperson appointed mumbai high court
மகாராஷ்டிர மாநில பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், கட்சியின் மும்பை ஐடி பிரிவின் முன்னாள் தலைவருமான ஆர்த்தி சாத்தே என்பவரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அவர் தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் என்பவர், ஆர்த்தி சாத்தே பிப்ரவரி 2023 முதல் ஜனவரி 2024 வரை கட்சிப் பதவிகளை வகித்தார். பின்னர் தான் அவர் ராஜினாமா செய்தார்.

இது வெட்கமற்ற செயல். ஜனநாயகத்தை கேலி செய்வது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, மக்களவை சபாநாயகரிடம் அவசர தீர்மானம் ஒன்றை அளித்தார்.
இதற்கு பாஜக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, "ஆர்த்தி தனது கட்சி உறுப்பினர் பதவியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்ததாகவும், இப்போது அவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
congrass opposes bjp ex spokesperson appointed mumbai high court