குடியிருப்பு காவலாளியின் மனைவி பாலியல் பலாத்காரம்... பால் பாக்கெட் விநியோகம் செய்பவன் அரங்கேற்றிய கொடூரம்... சென்னையில் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேபாள நாட்டைச் சார்ந்த காவலாளி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடி அறையில் தனது மனைவியுடன் தங்கி இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் காவலுக்கு இருந்த காவலாளி அசந்து உறங்கிகியுள்ள நிலையில், இவரது இல்லத்தில் புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் ஒவ்வொரு குடியிருப்பாக சென்று அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் காவலாளியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளான். வீட்டில் காவலாளியின் மனைவி தனியாக இருந்த நிலையில், பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். 

பின்னர் கீழே காவலுக்கு இருந்த தனது கணவரிடம் நடந்த கொடுமையை கண்ணீருடன் விவரிக்கவே, இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இது குறித்த புகாரை ஏற்ற காவல்துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

இந்த விசாரணையில், பச்சை நிறத்திலான உள்ளாடை அணிந்த நபர் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள வீடுகளில் விலைமதிப்புள்ள பொருட்கள் ஏதும் கிடைக்கிறதா? என்று நோட்டமிட்ட நபர் வீட்டின் மேல் மாடிக்கு வந்து காவலாளிகள் மனைவி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். 

பின்னர் அவரது இல்லத்திற்கு சென்று கதவை தட்டிய நிலையில், கணவர் வந்துவிட்டார் என்று கதவை திறந்த பெண்மணியை கத்திமுனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில், அங்குள்ள அமைந்தகரை கக்கன்ஜி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீடு வீடாக பால் பாக்கெட் போட்டு வந்த வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், இவன் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் நேரத்தில் ஆளில்லாத வீடுகள் மற்றும் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை குறித்து, இதுபோல கைவரிசை காட்டி உள்ளது தெரியவந்துள்ளது. இவனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai girl sexual harassment police arrest culprit


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->