"கட்சி பதவிக்கு பணம் கேட்ட விவகாரம்": தவெகவின் முக்கிய புள்ளி பதவிநீக்கம்! - Seithipunal
Seithipunal



பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி பெத்தராஜ், தன் உறவினருக்குத் தவெக சாயல்குடி நகர் பொருளாளர் பதவி வாங்கக் கடலாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதரனை அணுகியபோது, அப்பதவிக்குப் பரிந்துரை செய்ய ₹15 லட்சம் செலவாகும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

நிர்வாகிகள் இடையே மோதல்: இ உரையாடலின் போது பிற கட்சி நிர்வாகிகளைப் பற்றி ஆபாசமாகப் பேசிய ஆடியோ வெளியானதால், ஆத்திரமடைந்த சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி மற்றும் நகர் செயலாளர் அந்தோணி மாதவடியான் ஆகியோர் பெத்தராஜிடம் நேரில் சென்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசில் புகார்: இரு தரப்பினரிடையே நடந்த இந்த மோதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தவெக நகர் செயலாளர் அந்தோணி மாதவடியான் மற்றும் தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பெத்தராஜ் உள்ளிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

கட்சியிலிருந்து பதவிநீக்கம்: உட்கட்சிப் பூசல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டு வீடியோ வைரலாகி கட்சிக்குக் களங்கம் விளைவித்ததைத் தொடர்ந்து, கடலாடி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதரனை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கி தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் மதன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Kadaladi West Union Secretary Dismissed Over Cash-for-Posts Allegation and Viral Audio


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->