"தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கு": முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு சோதனை!
CCB Raids Former Minister Anbil Mahesh Poyyamozhi Properties in Multi-Crore Private School Fraud Scam
வழக்கு பின்னணி: தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல், DTCP அனுமதி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்புச் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கைது மற்றும் விசாரணை: இவ்வழக்கில் முக்கிய எதிரி B.T.அரசுகுமார் (59) கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. B.T.அரசுகுமாரின் 20 வங்கிக் கணக்குகள் மற்றும் முத்துகுமாரின் 29 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் மீது வழக்கு: சாட்சிகளின் வாக்குமூலங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சோதனை: இதனைத் தொடர்ந்து, இன்று (16.09.2026) காலை முதல் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குச் சொந்தமான 4 இடங்களிலும், அவரது உதவியாளர் வாலடி கார்த்திக்கிற்குச் சொந்தமான 2 இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
CCB Raids Former Minister Anbil Mahesh Poyyamozhi Properties in Multi-Crore Private School Fraud Scam