இரண்டுல ஒன்னு... பெஸ்ட்டை சூஸ் பண்ணி, ஒர்ஸ்டை டீலில் விட்ட அம்மு... சென்னையில் மணப்பெண் அட்ராசிட்டி..! - Seithipunal
Seithipunal


முகநூல் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் முன்னாள் காதலனுடன் சென்ற பெண்மணி குறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையிலுள்ள நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்மு. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரிடம், முகநூல் மூலமாக அம்முவிற்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததால், இன்று திருமணம் நடைபெற இருந்துள்ளது. வில்லிவாக்கத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணமக்கள் கார்த்திக் மற்றும் அம்மு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென அம்மு மண்டபத்தில் இருந்து மாயமாகவே, திருமண விட்டார்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி மண்டபத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதன்போது, அம்மு ஆட்டோவில் ஏறி வேறு இளைஞருடன் சென்றது தெரியவந்துள்ளது. 

தற்போது, கிண்டி காவல் நிலையத்தில் அம்மு நிஷாந்த் என்ற இளைஞருடன் தஞ்சம் அடைந்துள்ளார். விசாரணையில், அம்மு நிஷாந்த்தையும், கார்த்திகையும் காதலித்து வந்த நிலையில், கார்த்திக்குடன் திருமணம் செய்து வாழ விருப்பமில்லை என்று கூறி நிஷாந்தை கரம் பிடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நான் நிஷாந்துடன் தான் செல்வேன் என காவல் நிலையத்தில் அடம் பிடித்துள்ளார். இதனால் காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai girl Ammu Cheat Love boy and Married Another Love Boy Same Time Love


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->