காமன்வெல்த் விளையாட்டு; தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்; மும்முறை தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தமிழக வீரர்கள்..!
Tamil Nadu athletes win medals in triple jump event at Commonwealth Games
ஸ்கொட்லாந்து நாட்டில் கிளாசிகோவில் நடைபெற்றுவரும் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற மும்முறை தாண்டுதல் (Triple Jump) பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரவீன் சித்திரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்று, இந்தியாவிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில், பிரவீன் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் 16.72 மீட்டர் தூரம் தாண்டிய ஜமைக்காவின் ஜோர்டான் ஸ்காட் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

அத்துடன், மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியாவும், 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாரும் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 07 தங்கம், 13 வெள்ளி, 07 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 06-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பதக்கப் பட்டியலில் 132 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 82 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 54 பதக்கங்களுடன் கனடா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
English Summary
Tamil Nadu athletes win medals in triple jump event at Commonwealth Games