'தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் 'எட்டப்பர்'கள்; தமிழர்கள் யாரும் ஆதரிக்க கூடாது'; ராகுல் காந்தி..! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார். அதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதன் பின்னர், மாமல்லபுரத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

பாஜக தொகுதி மறுவரையறை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இது தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், அது தமிழக மக்களிடமிருந்து அதிகாரத்தை பறித்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையை ஒவ்வொரு மாநில, தேசிய கட்சியும் தோற்கடிக்க வேண்டும் என்றும், தமிழர்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது அவ்வாறு தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் 'எட்டப்பர்'கள். மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்சினை இது என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi says those supporting constituency redelineation are Etappers


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->