ஜெம் வீராமணி போக்சோ வழக்கு: 20 ஆண்டுகாலக் கொடூரம்... சிக்கிய காணொளி ஆதாரங்கள்... ரூ.50 கோடி லஞ்சப் புகார், மற்றும் முதல்வர் விஜய் உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை ‘ஜெம் கிரானைட்ஸ்’ அதிபர் ஆர். வீராமணி (84) மீதான போக்சோ வழக்கில், அதிகாரப் பலம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட மறைமுகச் சூழ்ச்சிகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. கடந்த 2025 அக்டோபரில் அளிக்கப்பட்ட சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், குற்றவாளியைக் காப்பாற்றும் நோக்கில் காவல் துறையினர் வழக்கை முடித்துவைக்க முயன்றனர். ஆனால், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் அதிரடித் தலையீட்டாலேயே இக்கொடூர வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது.

விசாரணையில், அறக்கட்டளை நடத்தி ஏழை எளிய மாணவிகளுக்குக் கல்வி உதவி வழங்குவதாகக் கூறி, போயஸ் கார்டன் சொகுசு பங்களாவிற்குச் சிறுமிகளை வரவழைத்து வீராமணி பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியது தெரியவந்தது. இதற்குச் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் தம்பதியினர் உடந்தையாக இருந்து மதுபானம் கொடுத்து மிரட்டியுள்ளனர்.

இத்தகைய கொடுமைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துள்ளதும், 2003-ஆம் ஆண்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்பிருப்பவதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, குற்றவாளியைத் தப்ப வைக்கச் சில காவல் உயர் அதிகாரிகள் ரூ.50 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்துள்ள அதிர்ச்சிப் புகாரைத் தொடர்ந்து, இடைத்தரகர்கள் மற்றும் அப்போதைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தற்போது மேலும் 9 பாதிக்கப்பட்ட பெண்கள் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. டிஜிபி மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய், லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் எவ்விதப் பாரபட்சமுமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தவுள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gem Granites POCSO Probe Exposes Police Cover-Up Extortion Allegations and 20-Year Exploitation Arc


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->