#BREAKING : 'சென்னை உணவுத் திருவிழா' இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


சென்னை உணவு திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாள் நடைபெறும் உணவுத் திருவிழா நேற்று தொடங்கியது. சிங்காரச் சென்னை 2022 உணவுத் திருவிழாவை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு தொடங்கி வைத்தனர். 

சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறும் உணவுத் திருவிழாவில் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பல்வேறு விதமான பாரம்பரியமான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உணவு கண்காட்சி தற்போது நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ஏதுவும் கிடையாது. 

இதில் ஒரு அரங்கில் கூட பீப் பிரியாணி உணவு இடம்பெறவில்லை இதற்க்கு ஒரு சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பல வகையான உணவுகள் விழா அரங்கில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், இன்று முதல் சுக்குபாய் பிரியாணி அரங்கில் பீப் பிரியாணி விற்பனை செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai food festival allowed to beef Biriyani


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->