சென்னை பாரிமுனையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
Chennai Drug Bust youngester arrested
சென்னை பாரிமுனை மின்ட் தெருவில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் வந்த இளைஞர் மணிஷ்ராவல் (வயது 25) கைது செய்யப்பட்டார்.
இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த அவரை, பூக்கடை தனிப்படை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையின் போது தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர் பாவனைக்காக வைத்திருந்த மெத்தம்பெட்டமைன் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர்.
இதை எங்கிருந்து பெற்றார்? மேலும் யாருக்கெல்லாம் இது தொடர்பு உள்ளது? எனும் கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
போதைப்பொருள் வட்டாரத்தில் இவர்களை போல் விரிந்து செயல்படும் இணைப்பு குழுக்களின் தொடர்பும் இந்த விசாரணையில் தெரியவரலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் சென்னை, ராமாபுரத்தில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரிடம் 200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர்களை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Chennai Drug Bust youngester arrested