சொத்துக்குவிப்பு வழக்கு : சுங்கத்துறை அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் மற்றும் முகவர்களிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

அதன் பின்னர், சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்தில் சுங்க பிரிவில் கண்காணிப்பாளராக பணி புரிந்த பல்லப் சின்ஹாவை கைது செய்து, விசாரணை நடத்தியதில், பணியில் இருந்த ஓராண்டு காலத்தில் பல்லப் சின்ஹா, தான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, பல்லப் சின்ஹா, மனைவி ரீனா சின்ஹா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ரீனா சின்ஹா விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில், பல்லப் சின்ஹா மீதான வழக்கு மட்டும், சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி மெகபூப் அலிகான் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, 'ஊழல் என்பது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் என்பதால், இதுபோன்ற வழக்குகளில் கருணை காட்ட முடியாது. 

இந்த வழக்கில் பல்லப் சின்ஹா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai customs officer four years prison in property case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->