கனமழை எதிரொலி: சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்!
Chennai corporation subway closed
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் சாலையின் சுரங்கபாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மழை நீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 14 சுரங்க பாதைகள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்பட்ட மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர் உள்ளிட்ட 14 சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன.

15 இடங்களில் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து உள்ளது. இதில் இரண்டு இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் அமைக்கப்பட்டது.
மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
Chennai corporation subway closed