நீண்ட நாட்களுக்கு பிறகு வழங்கப்பட்ட அனுமதி.. சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனால், தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்து. மேலும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில், தற்போது  இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. 

இந்நிலையில், இன்று முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர், ஈசிஆர் உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேசமயம் கடற்கரையில் கூட்டம் கூட கூடாது, கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி இருப்பதால், இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai corporation allowed people for marina beach


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->