சென்னை: கஞ்சா வழக்கில் சிக்கிய கல்லூரி மாணவி! மொத்தம் 11 பேர்.. என்னங்க நடக்குது தமிழ்நாட்டுல?! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஒரு மாணவி உள்பட 11 கல்லூரி மாணவர்களை செங்கல்பட்டு நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்து உள்ளது. மேலும், இவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த ரவுடி செல்வமணி உள்ளிட்ட மூவரை 15 நாட்கள் காவலில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பவமும், பின்னணியும்:

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியை சுற்றியுள்ள மாணவர் மற்றும் மாணவிகள் தங்கியுள்ள தனியார் விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, இன்று காலை பொத்தேரியில் உள்ள அனைத்து தனியார் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளிலும் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம் எல் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும், பாங் 5, ஸ்மோக்கிங் பாட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டுள்ளது.

மேலும், ஒரு மாணவி உள்ளிட்ட 11 கலோரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு இந்த போதை பொருள்களை விநியோகம் செய்த ரவுடி செல்வமணி உள்ளிட்ட 3 போரையும் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சா வழக்கில் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவ சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Chengalpattu College Students Drugs use TN Police


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->