வயிறுவலி, முதுகு வலியால் அவதியுற்று வந்த பெண் காவல் அதிகாரி.. அரங்கேறிய சோகம்.. கண்ணீரில் பச்சிளம் குழந்தைகள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள ஆவடி சிறப்பு ஆயுதப்படை காவல் அதிகாரி பாக்யஸ்ரீ (வயது 28). இவரது கணவர் முரளி. முரளி தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கவுசிக் என்ற 5 வயது மகனும், நவசிக் என்ற இரண்டரை வயது மகனும் உள்ளனர். 

முரளியின் தந்தை திருவெற்றியூர் பகுதியில் உள்ள மதுரா நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இறந்துள்ளார். இதனால் முரளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவெற்றியூர் மதுரா நகரில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் பாக்யஸ்ரீ வீட்டின் மாடிக்கு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முரளி மாடிக்கு சென்று பார்க்கையில், பாக்யஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். 

அவரது அருகே இருந்த அலைபேசியில், " தனக்கு முதுகு வலி மற்றும் வயிற்று வலி இருக்கிறது என்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என்றும், எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை " என்றும் வீடியோ பதிவு செய்து தற்கொலை வாக்குமூல வீடியோ காட்சிகள் இருந்தது. 

இந்த விஷயம் தொடர்பாக சாத்தாங்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாக்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Avadi Lady Cop Pakyasri suicide due to Spinal and Stomach Pain


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->