தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்!
Chennai Anna University bomb threaten call
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கணினிமையத்துக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மாலை மர்ம நபர்கள், இமெயில் மூலம் அங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உடன் சென்று இடத்தை முழுமையாக சோதனை செய்தனர். இறுதியில் மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், வெள்ளிக்கிழமை காலையிலும் குறுஞ்செய்தி மூலம் மீண்டும் அதேவிதமான மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சமீப நாட்களில், சென்னை நகரில் உள்ள பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் போலீசார் முழுமையாக தடுப்பும், கண்காணிப்பும் மேற்கொண்டு வருகின்றனர்.
மொத்தம் 12 முறை வந்த இந்த மிரட்டல்களும் புரளியாகவே மாறியுள்ளன. ஒரு சம்பவத்தில், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்துக்கூறிய மிரட்டல், மனவளர்ச்சி குறைபாடுள்ள சிறுவன் தனது தந்தையின் செல்பேசியில் இருந்து செய்தது என தெரியவந்தது. போலீசார் எச்சரிக்கை அளித்து விடுவித்தனர்.
English Summary
Chennai Anna University bomb threaten call