படிப்பு சொல்லிக்கொடுக்கிறேன் என்ற பெயரில், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த காமுக ஆசிரியர்..!
Chengalpattu Teacher abuse student police arrest culprit
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் மேலச்சேரி பகுதியை சார்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதே பகுதியை சார்ந்த கணவரை இழந்த 35 வயது பெண், அவரது மகனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அந்த 35 வயது பெண்மணி அருகேயுள்ள சத்துணவு மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக பெண்மணியின் வீட்டிற்கு சென்ற கார்த்திக், அவரது மகனுக்கு இணைய வகுப்புகள் குறித்த பாடங்கள் நடத்துகிறேன் என்றும், அவரை தனது இல்லத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட பெண்மணி கார்த்திக்கின் இல்லத்திற்கு மகனை அனுப்பி வைத்துள்ளார். அந்த சிறுவன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சிறுவன் வீட்டில் சோர்வுடன் இருந்துள்ளான்.

மேலும், அடிக்கடி வாந்தியும் எடுத்துக்கொண்டு இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த தாய் தனது மகனிடம் விசாரணை செய்துள்ளார். இதன்போது அதிர்ச்சி தகவலாக, கார்த்திக் சிறுவனிற்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததும், ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தி மிரட்டி பல கொடூரத்தை அரங்கேற்றி புகைப்படம் எடுத்து மிரட்டி வந்ததும் அம்பலமானது.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவன் குளித்துக்கொண்டு இருக்கவே, அவனது அலைபேசியை சோதனை செய்துள்ளார். அப்போது மகன் பலவந்தப்படுத்தப்பட்ட காட்சிகள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆதாரத்துடன் பெண்மணி அங்குள்ள பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Chengalpattu Teacher abuse student police arrest culprit