திமுக கலக்கம்! அதன் கூட்டணிக்குள் குழப்பம் - சொல்கிறார் எல்.முருகன்!
central minister l murugan say about admk bjp alliance DMK
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியை விவரிக்கும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது,
"பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததோடு, 12வது ஆண்டில் பயணிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாடு கண்கூடாக வளர்ச்சி கண்டுள்ளது.
2014க்கு முந்தைய ஆட்சிகளில் உறுதியற்ற முடிவுகள், ஊழல் மற்றும் முறைகேடுகள் காணப்பட்டது. பிரதமர் மோடி, ஊழலற்ற நிர்வாகம், ஏழைகளின் நலன் மற்றும் வலிமையான தீர்மானங்கள் மூலம் நாட்டை முன்னேற்றி உள்ளார்.
2047ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டை அடையும் போது, நாட்டை வல்லரசாக மாற்றும் நோக்கில் மோடி செயல்படுகிறார்.
அமைச்சர், இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" மூலமாக பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதத்துக்கு பதிலடி கொடுத்ததாகவும், மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் நேரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறினார்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நிலை திமுகவிற்கு கலகத்தையும், அதன் கூட்டணிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இறுதியாக திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் முருகன் மாநாடு, தமிழக அரசியலில் தாக்கத்தை உண்டாக்கும் எனவும் மத்திய அமைச்சர் எல். முருகன் உறுதிபட கூறினார்.
English Summary
central minister l murugan say about admk bjp alliance DMK