குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு-மத்திய அரசு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வரும் ஜனவரி 26 தேதி தில்லியில் நடைபெறுகின்ற குடியரசு நாள் அணிவகுப்பில் இடம் பெறுவதற்கான தமிழக அரசு ஊர்தியில் பாரதியார், வ.உ.சி., வேலு நாச்சியார் படங்கள் இடம் பெறத் தமிழக அரசு முடிவு செய்து, ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி இருந்தது. ஆனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நேற்று தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசு முடிவு செய்வதில்லை. மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகள் உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர்குழு நிராகரித்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt speech about republic day parade


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->