ஓய்வூதியம் மற்றும் மருத்துவக் காப்பீடு இணைந்த என்பிஎஸ் சுவாஸ்த்யா புதிய திட்டம் விரைவில் அறிமுகம்!
Central Government To Launch Integrated NPS Swasthya Pension And Health Insurance Scheme
வயதான காலத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் நிம்மதியான வாழ்க்கையும், தடையற்ற மருத்துவ வசதியும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தைக் கொண்டு வரவுள்ளது. பொதுவாக ஓய்வூதியத் திட்டங்களும் மருத்துவக் காப்பீடுகளும் தனித்தனியாகவே இருக்கும் நிலையில், தற்போது இவை இரண்டையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் என்பிஎஸ் சுவாஸ்த்யா பென்ஷன் என்ற புதிய திட்டம் இன்னும் எழுபது நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ் ராமன் கூறும்போது, இந்த திட்டத்திற்கான ஒப்புதல் பெறப்பட்டு தற்போது அதனைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தின்படி, ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து பயனாளர்களுக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை வழங்கும். குறிப்பாக ஐந்து லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடிய கடுமையான நோய்கள் மற்றும் பெரிய மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளை எளிய முறையில் சமாளிக்க இத்திட்டம் பெரிதும் உதவும். மருத்துவமனைச் செலவுகளின் போது, முதலில் பயனாளரின் ஓய்வூதிய மருத்துவக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தப்படும். அதன் பிறகு மீதமுள்ள தொகையைக் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும் வகையில் இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக இந்த மருத்துவ ஓய்வூதியக் கணக்கில் மூவாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பங்களிப்பு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Central Government To Launch Integrated NPS Swasthya Pension And Health Insurance Scheme