யு.பி.எஸ்.-சை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்குவரிச்சலுகை..நிதி அமைச்சகம் அறிவிப்பு!
Central government employees will be allowed to take the UPSC exam Finance Ministry announcement
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை யு.பி.எஸ்.-சை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு, உறுதியான ஊதியத்தைப் பெறும் விதமாக, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் NPS கீழ், மத்திய அரசால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம்UPSஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது 01.04.2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS), 01.04.2025 முதல் அமலில் வருகிறது. இது, தற்போதைய தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) உடன் இணையாக அமையும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, NPS திட்டத்தில் வழங்கப்படும் வரிச்சலுகைகள், தற்போது புதிய UPS திட்டத்திற்கும் மாறாமல் (mutatis mutandis) பொருந்தும்.
ஒருமுறை விருப்பம்: NPS திட்டத்தில் உள்ள ஊழியர்கள், UPS-க்கு மாற ஒரு முறை வாய்ப்பு பெறுகின்றனர்.
PFRDA வழிகாட்டு விதிகள்: 2025 மார்ச் 19 அன்று வெளியீடு. வரிச்சலுகைகள்: NPS போலவே, UPS ஊழியர்களுக்கும் வரி நிவாரணம் மற்றும் ஊக்கத்தொகை கிடைக்கும்.
இந்த திட்டம் ஊழியர்களுக்கு பதற்றமில்லாத ஓய்வு வாழ்வை உறுதி செய்யும் வகையில் அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Central government employees will be allowed to take the UPSC exam Finance Ministry announcement