இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.. அரசு வேலையில் பணிபுரிய வேண்டுமா?! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பிரிவு 'பி' மற்றும் 'சி' பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'பி' பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

இதையடுத்து, 'சி' பிரிவு பணிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்தப் போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பெருமளவு பங்கேற்று வெற்றி பெறவேண்டும் என்ற குறிக்கோளில், மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகியவை இணைந்து, வருகிற 9-ந்தேதி இந்த தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவம் மிக்க வல்லுனர்களை கொண்டு, ஒரு நாள் கருத்தரங்கத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் காலை 10 மணிக்கு நடத்துகிறது. 

தமிழக அரசு நடத்தும் இந்த பயிற்சி கருத்தரங்கத்தில், போட்டித்தேர்வுகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்துக்கொள்ளலாம். மேலும், நேரில் வர இயலாத மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி இணையதளத்திலும், அரசு கேபிள் டி.வி.யிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் மற்றும் சமூக ஊடகங்களிலும் பதிவேற்றப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government allounce in government exams


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->