மோசடி வழக்கு விவகாரம்: யூடியூபர் விஷ்ணுவை 03 நாள் கஷ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை..!
Central Division Police interrogates YouTuber Vishnu for 3 days in fraud case
யூடியூபர் விஷ்ணு மீது பல சர்ச்சைகள் வெளிவந்தது. முன்னதாக வீடியோ வெளியிட விவகாரத்தில் சிக்கியிருந்தார். அதிலும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற போது அவரை உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து அடித்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
குறித்த வீடியோ வெளியானத்திலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இவர், ஆன்லைன் ட்ரெண்டிங்கில் லாபம் பெற்றுத்தருவதாக கூறி மோசடி செய்த விவகாரம், அவரது மனைவியை மோசடி செய்து கொடுமைபடுத்தியதாகவும், புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் ஏற்கனவே அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விஷ்ணுவை கைது செய்தனர்.
இந்நிலையில், மோசடி விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவில், யூடியூபர் விஷ்ணு மீது இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 1.62 கோடி அளவிற்கு விஷ்ணு மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஏற்கனவே, அவர் சிறையில் வந்த நிலையில், மீண்டும் அவரை போர்மல் அரெஸ்ட் என்ற அடிப்படியில் கைது செய்தனர்.
அத்துடன், அவரை மூன்று நாட்கள் கஷ்டடியில் எடுத்து மத்திய பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங்கில் எப்படி எல்லாம் மோசடி செய்துருக்கிறார் என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் விரிவான விசாரணையை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் நடத்தி வருகின்றனர் .
English Summary
Central Division Police interrogates YouTuber Vishnu for 3 days in fraud case