டெல்டாவில் மழையால் பயிர்சேதம் அடைந்த பகுதிகளை மத்திய குழு ஆய்வு.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி வங்கக்கடல் மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்தது. 

இந்த மழையினால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், நெற்பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்து, அழுகியுள்ளன. 

தமிழகத்தில், பருவம் தவறி பெய்த மழையினால், பயிர்கள் நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தீர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். 

இந்த நிலையில், இன்று தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதம் குறித்து, யூனுஸ், பிரபாகரன் மற்றும் போயா உள்ளிட்ட தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர்ச்சேதம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 

இதன் முடிவில், ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில், மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Committee examining in crop damage caused in delta


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->