செல்போன் கேம் சண்டை விபரீதம்...! - 12ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து உயிரிழப்பு...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகிலுள்ள கொத்தகுறுகை பகுதியில் நிகழ்ந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகராஜின் மகன் ஹரி (16), ராயக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

விடுமுறை நாட்களை பயன்படுத்தி வீட்டில் செல்போனில் விளையாட்டில் மூழ்கியிருந்த அவரை, பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது.

இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ஹரி, கடந்த 2ஆம் தேதி விஷம் அருந்தி உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார்.

இதனை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல், ஹரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த துயரச் சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், உத்தனப்பள்ளி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இளம் மாணவனின் திடீர் உயிரிழப்பு, அந்தப் பகுதியில் பெரும் வேதனையையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cell phone game fight turns tragic 12th grade student dies after consuming poison


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->