சி.பி.ஐ. அதிரடி! சலுகை வாங்கித் தருவதாக ஏமாற்றம்..! - லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டருக்கு 4 ஆண்டு சிறை
CBI takes action Disappointed that they offering concessions 4 years prison inspector who took bribe
சென்னையின் அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரவீன்குமார், எதிர்பாராத முறையில் சி.பி.ஐ. அதிகாரிகளின் வலையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பணியில் இருந்தபோதே நேற்று அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த தகவலின்படி, 2017ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த காலத்தில், தனது தம்பி வருமான வரித்துறையில் பணிபுரிவதாக கூறி, அதன்மூலம் சலுகைகள் பெற்றுத்தருவதாக ஏமாற்றி ஒரு நபரிடமிருந்து ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னதாகவே அவரை கைது செய்திருந்தாலும், பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்து, அதற்கிடையில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று மீண்டும் பணியில் சேர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீண்டநாளாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. மேலும் இந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கி, பிரவீன்குமாருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
இதையடுத்து உடனடியாக சி.பி.ஐ. காவலர்கள் அவரை மீண்டும் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
CBI takes action Disappointed that they offering concessions 4 years prison inspector who took bribe