நெல்லையில் ஐ.டி., ஊழியர் கவின் ஆணவப்படுகொலை வழக்கு: விசாரணையை தொடங்கியுள்ள சிபிசிஐடி..!
CBCID begins investigation into the murder of IT employee Kavin in Nellai
திருநெல்வேலியில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் என்பவர் ஆணவக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணையை தற்போது சிபிசிஐடி போலீசார் தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலி கே.டி.சி., நகரில் கடந்த 27-ஆம் தேதி ஐ.டி. நிறுவன ஊழியர் கவின் செல்வ கணேஷ் 27, வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டியல் இன வாலிபரான இவர் வேறு சமுதாய பெண்ணை காதலித்ததால் அப்பெண்ணின் தம்பி சுர்ஜித் 23, என்பவன் இவரை வெட்டி கொலைசெய்துள்ளார். இதில் சுர்ஜித்தின் பெற்றோரான காவல்துறையில் பணிபுரியும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருக்கலாம் என புகார் கூறப்பட்டது. தற்போது அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரவணன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியன் போலீசிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியன் போலீசிலும் எஸ்.ஐ., ஆகவும் உள்ளனர். இருவரும் சம்பவத்தின் போது அங்கு இல்லை. எனினும் கவின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு திரும்ப பெறாமல் போராட்டங்கள் தொடர்வதால் நேற்று இரவு எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார்.
இந்த ஆணவ படுகொலை தொடர்பில் திருநெல்வேலி மாநகர போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான குழுவினர் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.
அத்துடன், கேடிசி நகரில் கவினின் காதலி சுபாஷினி பணியாற்றும் தனியார் மருத்துவமனையிலும் ஆய்வு மேற்கொண்ட நிலையில், கொலை நடந்த பகுதியில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தியுள்ளனர்.
English Summary
CBCID begins investigation into the murder of IT employee Kavin in Nellai