புறம்போக்கு நிலத்தை விற்று ரூ.150 கோடி ஊழல்.! அரசுக்கே அல்வா கொடுத்த சகோதரிகளை தட்டி தூக்கிய சிபிசிஐடி.!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 6 வழிச்சாலை விரிவாக்க பணியானது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து சாலை விரிவாக்க பணியில் தொடர்புடைய வருவாய் துறை அதிகாரிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் மதுரை மாவட்ட சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் நர்மதா மற்றும் அரசு அதிகாரியாக பணியாற்றி வரும் அவருடைய தங்கை ஆகியோரை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைக்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை பட்டா போட்டு விற்றது மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதில் பல கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடைபெற்றது சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

இந்த நிலையில் தான் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த வருவாய்த்துறை தாசில்தார் மற்றும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் 4 அதிகாரிகளை ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்த நிலையில் தற்போது நர்மதா மற்றும் அவருடைய தங்கையை காஞ்சிபுரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக பலமுறை சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த நர்மதா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நர்மதா தலைமறைவாக இருந்ததற்கு உதவிய அரசு ஊழியரான அவருடைய தங்கையும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான நர்மதா கைது செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் துறை அதிகாரிகள் பலர் இந்த ஊழல் வழக்கில் சிக்குவார்கள் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBCID arrested govt officials who involved in Rs150crore corruption


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->