வேலைவாய்ப்புக்காக போலி ஜாதி சான்றிதழ்: முழுமையான விசாரணைக்கு பிறகே வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Caste certificates should be issued only after a thorough investigation Madras High Court orders
முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்காக போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியரின் ஜாதி சான்றிதழ் குறித்த விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆப் பரோடா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்எஸ் சுப்ரமணியம், கே . ராஜசேகர் அமர்வு முன்பு வந்தது.

விசாணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க கால வரம்பு நிர்ணயிக்க அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், பழங்குடியினரின் ஜாதி சான்றிதழ் வழங்க அரசு வகுத்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜாதி சான்றிதழின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழு அமைக்க வேண்டும் என்றும், இக்குழு விரைந்து ஜாதி சான்றிதழ் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், முழுமையான விசாரணைக்கு பிறகே ஜாதி சான்றிதழ் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக ஆறு வாரத்திற்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Caste certificates should be issued only after a thorough investigation Madras High Court orders