சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசின் அறிவிப்புக்கு அதிமுக உரிமை மீட்பு குழு வரவேற்பு!
Caste census AIADMK Rights Restoration Committee welcomes Centres announcement
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:மக்களின் பொருளாதார நிலை, வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு குறித்து ஆய்வு செய்து இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது.சாதி வாரி கணக்கெடுப்பு என்பது இந்தியாவின் பல்வேறு சமுதாய பிரிவுகளின் மக்கள் தொகை, அவர்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நிலையை அறியவும், சம வாய்ப்புகளை உறுதி செய்யவும், திட்டங்களை வகுக்கவும், சட்டங்களை இயற்றவும் உதவுகிறது. இதன் மூலம், சமுதாயப் பிரிவுகளின் தேவைகள் மற்றும் சவால்களை புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டங்களை அமல்படுத்தவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் (ஏப்ரல் 30) புது டெல்லியில் நடைபெற்றது. இதில், மக்கள் தொகை, கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிப்பை கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணன் OPS அவர்கள் வரவேற்றுள்ளார்.புதுச்சேரி மாநில தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பாக நாங்கள் வரவேற்கிறோம் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Caste census AIADMK Rights Restoration Committee welcomes Centres announcement