அனுமதியின்றி பேரணி... அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


 கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரைச் சார்ந்த கும்பலால் ராணுவ வீரர் பிரபு என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா சாலை மற்றும் சிவானந்தா சாலை சந்திப்பில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

இந்த பெயர் அணையில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட பாஜகவினர் முன்னாள் ராணுவ வீரர்கள் துணை ராணுவ படையினர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணிக்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை மீறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தலைமையில் சட்டவிரோதமாக பேரணி நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பேரணியில் பங்கேற்ற 3500 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case registered against 3500 people including Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->