தவெக தலைவர் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை - 4 பேர் மீது வழக்கு பதிவு.!!
case file against tvk fans for big garland to vijay in thiruvarur
தமிழக சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்று, பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் திருவாரூருக்கு மதியம் மூன்று மணியளவில் வருகை தந்தார்.
திருவாரூருக்கு விஜய் வந்ததும், அவரை வரவேற்கும் விதமாக கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து தவெக நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். அந்த மாலையை தவெக தலைவர் விஜய் தனது பிரசார வாகனத்தில் நின்றபடி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
case file against tvk fans for big garland to vijay in thiruvarur