தவெக தலைவர் விஜய் மீதான வழக்கு மதுரை காவல் நிலையத்திற்கு மாற்றம்.!!
case against tvk leader vijay change to madurai police station
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் கடந்த 21-ந் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகைத் தந்தனர்.
இந்த மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் விஜய் ‘ரேம்ப் வாக்’ சென்றபோது தடுப்புகள் அனைத்தையும் மீறி தொண்டர்கள் சிலர் ‘ரேம்ப் வாக்’ மேடையின் மீது ஏறியதால் விஜயின் பவுன்சர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர்.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர். இது தொடர்பாக சரத்குமார் மற்றும் அவரது தாயார் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மேலும், குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். இதையடுத்து குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.
English Summary
case against tvk leader vijay change to madurai police station