சென்னை முதல் புதுச்சேரி வரை சரக்கு கப்பல் சேவை நாளை தொடக்கம்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறித்த நேரத்தில் சென்றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. மத்திய மாநில அரசுகள் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து தான் காணப்படுகிறது.

தமிழகத்தின் மையப் பகுதியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படும் உதிரி பாகங்களாகட்டும் சென்னையில் தயாரிக்கப்படும் பொருட்கள் தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதிலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் சென்னை முதல் புதுச்சேரி இடையே வாரம் இருமுறை சரக்கு கப்பல் சேவை நாளை முதல் தொடங்க உள்ளது. 2017 ஆம் ஆண்டில் சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கிடையே வருவாயை பகிர்ந்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சரக்கு கப்பல் இயக்குவதற்கான துறைமுக அமைப்பு சரக்குகளை கையாளும் இயந்திரம் போன்றவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 67 மீட்டர் நீளம் கொண்ட சரக்கு கப்பல் வாரத்திற்கு இருமுறை சென்னை புதுச்சேரி இடையே இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவை மூலம் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கும் என நம்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cargo ship service from Chennai to Puducherry starts


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->