'நீண்ட காலம் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதில் முன்னுரிமை'; புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!
New Supreme Court Chief Justice says priority should be given to completing long pending cases
இந்திய உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை நீதிபதியாக பணியாறிய கவாய், இன்றுடன் (23-ஆம் தேதி) ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாகப் புதிய தலைமை நீதிபதியாக நவம்பர் 24-ஆம் தேதி சூர்ய காந்த் பொறுப்பேற்கிறார். 2027 பிப்ரவரி 09-ஆம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார்.
இது குறித்து இவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பிரத்தேக பேட்டியில் கூறியதாவது: 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைப்பதில் உடனடி கவனம் செலுத்துவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நீதிபதிகளை உகந்த முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதை, தான் இலக்காகக் கொள்ள வேண்டும் என்றும், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்கும் பாடுபடுவேன் என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நாடு முழுவதும் மத்தியஸ்தம் பற்றிப் பேசப்படுகிறது. இந்த மத்தியஸ்தம் என்பது காலத்தின் தேவை என்று தான் நினைக்கிறதாகவும், மத்தியஸ்தம் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா கூறியுள்ளார்.
English Summary
New Supreme Court Chief Justice says priority should be given to completing long pending cases