'டில்லி குண்டு வெடிப்பு சம்பவம் மூலம் பாகிஸ்தான் தனது இருப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கிறது': மஹாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு..!
Maharashtra Chief Minister alleges that Pakistan is trying to assert its presence through the Delhi blast incident
தலைநகர் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூலம் தனது இருப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறதாக மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார். மும்பை 26/11 தாக்குதல்களின் 17-வது ஆண்டு நினைவு தினம் வரவுள்ளது. இதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பட்னவிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பாகிஸ்தானால், இந்தியாவை நேரடிப் போரில் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்திருக்கிறது. இதனால் ஒரு மறைமுகப் போரை, ஒரு போலிப் போரை நடத்த முயற்சிக்கிறதாகவும், டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் மூலம் மீண்டும் தனது இருப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாம் ஒரு மாற்றம் செய்யப்பட்ட இந்தியாவைப் பெற்றிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், இந்தியா முதலில் இவற்றை உணர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் குண்டுகளை வெடிக்கச் செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது, மேலும் மும்பை உட்பட நமது நாட்டின் பல நகரங்கள் அவர்களின் இலக்காக இருந்தன. ஆனால், நமது இந்திய அமைப்புகள் இதை உணர்ந்து அவர்களை நேரடியாகத் தாக்கியபோது, டில்லியில் ஒரு வெடிப்பை நிகழ்த்தி தங்கள் இருப்பை நிரூபித்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்த 'ஆப்பரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கையை முந்தைய அரசு எடுத்திருந்தால், பஹல்காம் போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நாடு சந்தித்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்காவின் வலிமை இரட்டை கோபுரங்களில் உள்ளது என்பதைக் காட்ட இரட்டை கோபுரங்கள் மீது 9/11 தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, இரட்டை கோபுரங்களைத் தாக்குவதன் மூலம், அமெரிக்காவின் இறையாண்மைக்கு சவால் விடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவின் இறையாண்மையின் மீதானது என்றும் முறித்த மஹாராஷ்டிரா முதல்வர், இந்தத் தாக்குதல் எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது என்றும், அந்த சவாலை நாம் புரிந்துகொண்டு, ஒருவேளை ஆப்பரேஷன் சிந்தூரின் துணிச்சலைக் காட்டியிருந்தால், இன்று யாரும் நம்மைத் தாக்கத் துணிந்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் நாம் அந்த தைரியத்தைக் காட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பட்னவிஸ், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்து வாழ முடியாது என்று பிரதமர் மிகத் தெளிவாகக் கூறினார். நமது ராணுவத்திற்கு ஆவர் முழு சுதந்திரம் அளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அனைத்து இலக்குகளையும் அழித்தது. ஆனால், பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை என்று குறிப்பி அவர், ஒரு வகையில், 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் உலகம் இந்தியாவின் வலிமையையும் திறனையும் கண்டுள்ளது என்று மஹா. முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.
English Summary
Maharashtra Chief Minister alleges that Pakistan is trying to assert its presence through the Delhi blast incident