பீஹாரில் நிதிஷ் குமார் அரசுக்கு ஆதரவு அளிக்க தயார்; ஆனாலும் ஒரு ட்விஸ்ட் வைத்த ஏஐஎம்ஐஎம் ஒவைசி..! - Seithipunal
Seithipunal


பீகாரில் 10-வது முறையாக முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுள்ளார். நடந்து முடிந்த பீஹார் சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணி 202 இரண்டு தொகுதிகளில் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிதிஷ் குமார் அரசுக்கு ஒரு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க தயார் என ஏஐஎம்ஐஎம் தலைவரும், எம்.பியுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஒவைசி கூறியதாவது:  நிதிஷ் குமாரின் அரசாங்கத்திற்கு எங்கள் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால், சீமாஞ்சல் பகுதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், எவ்வளவு காலம் பாட்னா மற்றும் ராஜ்கிரை மையமாகக் கொண்டு எல்லாம் நடக்கும்.? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அங்கு நதி அரிப்பு, பெரிய அளவிலான இடம்பெயர்வு மற்றும் ஊழல் ஆகியவற்றால் சீமாஞ்சல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், எங்கள்  ( ஏஐஎம்ஐஎம் ) 05 எம்எல்ஏக்களும் வாரத்திற்கு இரண்டு முறை அவரவர் தொகுதி அலுவலகங்களில் அமர்ந்து, அவர்களின் இருப்பிடத்துடன் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். அது அவர்கள் இருக்கும் இடத்தை சரியாகக் காண்பிக்கும். இந்த வேலையை ஆறு மாதங்களுக்குள் தொடங்க முயற்சிப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது நானும் அங்கு சென்று பார்க்க முயற்சிப்பேன் என்றும் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ''பீஹார் மக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். குறிப்பாக, ஆர்ஜேடி கூட்டணியால் பாஜகவைத் தடுக்க முடியாது என்று நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன்''என்று ஒவைசி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Owaisi supports Bihar Nitish government


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->