இமாச்சல பிரதேசம் - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - 4 பேரின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


இமாச்சல பிரதேசம் - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார் - 4 பேரின் நிலை என்ன?

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாநிலங்களின் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழைக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில், இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா மாவட்டம் லட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜிவ் பாண்ட்லா. இவர் நோய்வாய்ப்பட்ட தனது அம்மா சந்தலா தேவியை ராம்பூறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ப்பதற்காக தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

இவர்களுடன் மேலும் 2 பேர் சென்றுள்ளனர். இதையடுத்து இந்தக் கார் இரவு 10.45 மணி அளவில் நூக்லி பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது, மழையால் சாலை சேதம் அடைந்திருந்ததால், திடீரென கார் நிலைதடுமாறி, அருகில் ஓடிய சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நேற்று வரை காரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

மழையினால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் காரில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car drown satlej river in himachal pradesh


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->