நடுரோட்டில் பற்றி எரிந்த கார்...! பூந்தமல்லி அருகே திக் திக் நிமிடங்கள்...! - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...! - Seithipunal
Seithipunal


ஆவடி அருகேயுள்ள திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் (30), தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அலுவலக பணிகளை முடித்துவிட்டு தனது காரில் வீட்டை நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.பூந்தமல்லி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறத் தொடங்கியது.

அபாயத்தை உணர்ந்த ஹேமந்த் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்தி வெளியேறினார்.சில நொடிகளிலேயே கார் முழுவதும் தீப்பிழம்பாக மாறி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹேமந்த் தீயை கட்டுப்படுத்த முயன்றாலும், நெருப்பு மின்னல் வேகத்தில் பரவியதால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், கடுமையாக எரிந்துகொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் கார் முழுமையாக எரிந்து சாம்பலானது.இந்த சம்பவம் தொடர்பாக நசரத்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சரியான நேரத்தில் ஹேமந்த் காரிலிருந்து வெளியேறியதால் மிகப்பெரிய உயிர் ஆபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

car caught fire middle road Minutes passed near Poonamalli Passengers fortunately escaped


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->