நெடுஞ்சாலை விபத்தில் தீப்பற்றி எறிந்த கார்..! நடந்தது என்ன?
Car catches fire in highway accident What happened
தென் மாவட்டங்களுக்கு, சென்னையில் வசிக்க கூடிய மக்கள் தொடர் விடுமுறை காரணமாக பெருமளவில் செல்கின்றனர். இதில் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பலரும் தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரத் தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நிலவுவது வழக்கம்.இந்த சூழலில், விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காரில் சென்னைக்கு வந்துகொண்டிந்தபோது முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது.
இதில் லாரி ஓட்டுநர் திடீரென வாகனத்தை மெதுவாக இயக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் பின்னால் வந்த 2கார்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 4 பேர் சென்ற கார் ஒன்றில் திடீரென தீ பிடிக்கத்தொடங்கியது.இதைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியவர்கள்,காரிலிருந்த உடனடியாக சுதாரித்துக்கொண்டு காரை விட்டு இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனால் உயிர் சேதம் ஏற்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டன.இந்தத் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சாலையில் பற்றி எரியும் காரை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பிரதான சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Car catches fire in highway accident What happened