தறிகெட்டு ஓடி தலைகுப்புறக் கவிழ்ந்த கார் - ஓட்டுனரின் கதி என்ன?
car accident in chennai keezhpakkam
சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் சாலையில் நேற்று வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் நல்வாய்ப்பாக எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இதைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடும் சேதத்துடன் சாலையில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபா தூக்க கலக்கத்தில் காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து போக்குவரத்து போலீசார் கார் ஓட்டுநர் பிரபாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
car accident in chennai keezhpakkam