தமிழகம் வரும் ராகுல் காந்தி..ஜனவரி 13ல் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்கள்!தவெகவுடன் கூட்டணியா? குழு அமைத்த செல்வப்பெருந்தகை! - Seithipunal
Seithipunal


மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 13ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, ராகுல் காந்தியை வரவேற்கவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திமுகவிடம் இருந்து 38 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 3 அமைச்சரவை பதவிகள் கோரி காங்கிரஸ் வலியுறுத்தி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கைக்கு திமுக தரப்பில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், திமுகவுடன் பேச்சுவார்த்தை சாதகமாக அமையாவிட்டால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்கப்படும் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மறைமுகமாக கருத்து தெரிவித்து வருவது அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் நேரடியாக குரல் கொடுக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியும் அதன் எம்.பி.க்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. ராகுல் காந்தியின் எஸ்.ஐ.ஆர். போராட்டம் மற்றும் வாக்கு திருட்டு குறித்த வீடியோக்களை விட, விஜய்க்கு ஆதரவான கருத்துகளே தமிழக காங்கிரஸ் தரப்பில் அதிகம் பகிரப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, முன்னதாக ஜனவரி 28ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொங்கலுக்கு முன்பாகவே ஜனவரி 13ஆம் தேதி அவர் தமிழகம் வருவது முக்கிய அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியின் இந்த வருகையின் போது, திமுக–காங்கிரஸ் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi coming to Tamil Nadu Political changes to happen on January 13 Alliance with Tvk Selvapperundhagai formed a group


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->