தூத்துக்குடி.! கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி நகரப் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்பொழுது தருவை மைதானம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில், அவர் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த யோகா பிரகாஷ்(25) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர், யோக பிரகாஷை கைது செய்து அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து யோக பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cannabis seller arrested in Thoothukudi


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->