செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்.. ஆவேசத்தின் உச்சியில் துரை வைகோ.! அதிர்ச்சியில் அமைச்சர்.!
candidate durai vaiko speech in trichy
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், "சிவனும், சக்தியும் அமைச்சர் நேரு என்பது எனக்கு தெரியும்.

நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. என் தந்தை வைகோ ஒரு அரசியல் சகாப்தம். அவருக்கு தலைகுனிவு வந்துவிடக்கூடாதே என்பதற்காக அரசியலுக்கு வந்தேன். அப்போது, கூட்டத்திலிருந்த தொண்டர் ஒருவர் தேர்தலில் என்ன சின்னத்தில் போட்டியிடப் போகிறீர்கள்? எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துரை வைகோ, "செத்தாலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவேன். நான் சுயமரியாதைக்காரன். தேர்தலில் போட்டியிடாமல், திராவிடர் கழகம்போல இயக்கம் நடத்துவோமே தவிர, வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட மாட்டேன். எங்களை தயவு செய்து புண்படுத்தாதீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்கு உண்மையாக இருப்போம். உயிரையும் கொடுப்போம் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
candidate durai vaiko speech in trichy