ஒரு கப் டீ வாங்கினால் தக்காளி இலவசம் - டீக்கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


ஒரு கப் டீ வாங்கினால் தக்காளி இலவசம் - டீக்கடை முன்பு திரண்ட பொதுமக்கள்.!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 170 ரூபாய் முதல் 180 ரூபாய் வரைக்கும், சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயை தாண்டியும் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால், தமிழக அரசு மக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய முடிவு செய்து அதன் படி விற்பனையும் செய்யப்பட்டு வந்தது. அதேசமயம், ஓட்டல் கடைக்காரர்களும் பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள கொளத்தூர் கண்பதிராவ் நகரில் ஒரு டீக்கடையில் டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த டீக்கடை முன்பு திரண்டுள்ளனர். 

மக்கள் குவிந்ததையடுத்து டீக்கடைக்காரர் இன்று 100 பேருக்கு மட்டும் தான் டோக்கன் என்று அறிவித்துவிட்டார். இதற்கிடையே டீக்கடைக்காரர் மக்கள் அதிகளவில் திரளுவார்கள் என்று முன்கூட்டியே போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

buy one cup tea get one kg tomatto free in chennai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->