போரூர் மின் மயானத்தில் பராமரிப்பு பணி! பிருந்தாவன் நகர் மின்மயானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


போரூர் மின்மயானபூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், பொதுமக்கள் அருகிலுள்ள பிருந்தாவன் நகர் மயானபூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வளசரவாக்கம் மண்டலம், பகுதி-34, 
வார்டு-151க்குட்பட்ட போரூர் மின்சார மயானபூமியின் புகைப்போக்கியில் (சிம்னி) பழுதடைந்துள்ள காரணத்தினால், மார்ச் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து போரூர் மின்சார மின்சார மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தற்பொழுது மேற்கண்ட மயானபூமியில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-149க்குட்பட்ட பிருந்தாவன் நகர் மயானபூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Burial ground maintainance work


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->