சென்னை அருகே துப்பாக்கியால் சுட்டு நெஞ்சில் பாய்ந்த குண்டு.! படுகொலை சம்பவத்தில் சற்றுமுன் திடீர் திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் துளசிதாஸ் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவருடன் ராம் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதி வழக்கம் போல் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு கிளம்பும் போது துளசிதாஸை, டாஸ்மாக் கடையின் வாசலில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

மேலும், இந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மற்றொரு ஊழியரான ராம் என்பவரையும் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். படுகொலை செய்யப்பட்ட துளசிதாஸ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே சமயத்தில் படுகாயமடைந்த ராம்.,யை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சற்றுமுன் ராம் உடலிலிருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவரை ஸ்கின் செய்த போது  நெஞ்சில் குண்டு பாய்ந்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். 

இந்த படுகொலை சம்பவத்தில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டு இருந்தபோதும், டாஸ்மார்க் கடை ஊழியரின் பணமோ, பொருளோ தொலைந்து போகவில்லை.

மேலும் கடையில் இருந்த பணம், மதுபாட்டில்கள் எதுவும் திருடு போகாத காரணத்தினால், இந்த படுகொலை சம்பவம் எந்த காரணத்துக்காக செய்யப்பட்டது என்று, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலையாளிகளை பல தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bullet found in ram heart place


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal