பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கான பயண திட்டம் வெளியீடு..!
The travel plan for Prime Minister Modi's visit to Tamil Nadu has been released
நாளை மறுநாள், 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியின் பயண திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து நாளை மறுநாள் (21-ந்தேதி) மதியம் 02.15 மணிக்கு சென்னை வருகை தரவுள்ளார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 02.50 மணிக்கு மதுராந்தகம் வந்தடையவுள்ளார். மதியம் 03 மணி முதல் 04.15 மணி வரை செங்கல்பட்டு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அதன் பின்னர் மாலை 05 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.
English Summary
The travel plan for Prime Minister Modi's visit to Tamil Nadu has been released